Monday 17 November 2014

காமராஜர், காந்திக்கு பிறகு ரஜினிதான்


காமராஜர், காந்திக்கு பிறகு நான் ரஜினியை பார்க்கிறேன். காமராஜரும், காந்தியும் செய்ததை நீங்கள் இந்த நாட்டுக்கு செய்யவேண்டும். உங்கள் மீது ரசிகர்கள் வைத்திருப்பது உண்மையான பாசம் என்றார்.

டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது

 ரஜினி மனிதநேயம் உள்ளவர். அவரது உள்ளத்தில் பொய் இல்லை. அதனால்தான் உலகத்தில் உள்ளவர்களின் மனதில் வாழ்கிறார். இந்த படத்தின் வெற்றி விழாவையொட்டி ரசிகர்களை ரஜினி சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

கவிஞர் வைரமுத்து பேசியதாவது


 இங்கு பேசியவர்கள் ரஜினியை தலைவர் என்றனர். கடவுள் என்றனர். தெய்வம் என்றனர். இப்படி புகழ்ந்து பேச அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற திறமை ரஜினியிடம் மட்டும்தான் இருக்கிறது. ரஜினி மனதை யாராலும் அளக்க முடியாது.
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று கால் நூற்றாண்டுகளாக விவாதம் நடக்கிறது. எந்த முடிவையும் அவர் மீது திணிக்க முடியாது. அவர் முடிவு எடுத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. என்றார்.


இயக்குனர் சங்கர்
 

நான் பிரம்மாண்ட இயக்குனர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், லிங்கா படத்தின் பாடல்களை பார்த்தபிறகு இதுதான் பிரம்மாண்டம் என்று தோன்றுகிறது. ஒரு படத்தை எவ்வளவு சீக்கிரம் எடுக்க வேண்டும் என்பதை கே.எஸ்.ரவிக்குமாரிடம் கற்றுக் கொள்ளவேண்டும். ‘லிங்கா’ படம் பத்து படையப்பாவுக்கு சமம் என்றார்.

காமெடி நடிகர் சந்தானம்
 

நான் ஒருதடவை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் அன்புக்கும் ஆசைக்கும் என்ன வித்தியாசம்? என்று கேட்டேன். அதற்கு ரஜினி, அனுஷ்காவுக்கும் ஒரு ஆயாவுக்கும் என்ன வித்தியாசம்? என்று என்னிடம் கேட்டார். என்ன சார் இப்படி பதில் சொல்றீங்கன்னு நான் திரும்பவும் அவரிடம் கேட்டதற்கு, அவர், நீ கேட்ட கேள்விக்கு பதில் இல்ல. கேள்வி கேக்கிறவனுக்குத்தான் பதில் என்று சொல்லி சிரித்தார் என்று சந்தானம் கூறியதும், ரசிகர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மேலும் சினிமா செய்திகளுக்கு
http://onlinearasan.blogspot.in/search/label/Cinema

No comments:

Post a Comment