Monday 17 November 2014

வருகிறது நமோ நியூஸ்


என்னதான் மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும் தமிகத்தில் அந்த கட்சியை யாரும் சீண்டுவதாக இல்லை. சூப்பர்ஸ்டார் இரஜினிகாந்தையும் முடிந்தவரை இழுத்துப்போட்டு பேசிபார்த்தார்கள். 

அவரோ ஒரே ஒரு கடிதம் ஜெ வுக்கு எழுதி உங்களுக்கு என் ஆதரவு கிடைக்காது என்று மறைமுகமாவே சொல்லிவிட்டார். இதனால் மண்டையை உடைத்துக்கொண்டு இருந்ததது, பா.ஜ.க சொல்வதைக் கேட்கவும் பார்க்கவும் தொலைக்காட்சி இல்லை மற்றும் பா.ஜ.க என்ன செய்கிறது என்று படித்து தெரிந்துக்கொள்ள நாளிதழ்கள் இல்லை என்று கண்டுபிடிக்க இத்தனை நாட்கள் ஆயிற்று.

அதனால் விரைவில் தமிழில் புதிய சேனல்கள் வரவுள்ளது. நமோ நியூஸ்சேனல் மிகவும் முக்கியகமாக வரப்போகிறது. பா..க தமிழ்நாட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஊடகங்களில் நுழைகிறது. மூன்று சேனல்களுக்கான லைசென்சுடன் களத்தில் இறங்குகிறது. “ நமோ நியுஸ் ”செய்தி சேனல், பொது பொழுதுபோக்கு சேனல் மற்றும் ஆன்மீக சேனல் என மூன்று தளங்களில் இறங்கவுள்ளது. 

கூடவே பத்திரிக்கை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்துகொண்டிருக்கிறது. என்ன பெயர் வைக்கலாம் என்ற ஆரம்பகட்ட ஆலோசனை நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே நியுஸ் 7 சேனல் ஒன்று வந்தது, அது ஆறிப்போன டீ, காப்பி செயல்படுகிறது.

சினிமா செய்திகளுக்கு

நடிகைகள் புகைப்படங்களுக்கு

உடல் பாதுகாப்பு

புதிய ரக ஸ்மார்ட் போன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 – 2017



No comments:

Post a Comment